பயிர்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-2026ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை காப்பீடு செய்ய, குத்தகை விவசாயிகளுக்கு விவசாயி பதிவு மூலம் வழங்கப்படும், விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளைத் தளர்வு செய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் ஒன்றாம் தேதிக்குள் பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















