கேரள மாநிலம் கோழிக்கோடுவில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குழந்தைகள் நல மருத்துவமனையின் சி பிளாக் பகுதியில் தீ பரவியது. ஒன்பதாவது தளத்தில் குளிர்சாதன வசதிகள் நிறுவப்பட்டிருந்ததால், உயிர்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் கரும்புகை வௌியேறியதால் நோயாளிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
















