பாம்பன் ரயில் பாலம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாகப் பாம்பன் ரயில் பாலம் பகுதியில் 65 கிலோ மீட்டருக்கு மேல் பலத்தை சூறாவளி காற்று வீசியதால் பாம்பன் ரயில் பாலம் வழியாக நேற்று முதல் ரயில்கள் இயக்கப்படாமல் ராமநாதபுரம் மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததாகத் தெரியவந்துள்ளது.
42.5 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே காற்று வீசுவதால் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சேதி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உட்பட ராமேஸ்வரத்திலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல இன்று ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
















