சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கும்மங்குடி விளக்கு பகுதியில் இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 54 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரேத பரிசோதனை முடிந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல்களுக்கு அமைச்சர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உறவினர்களிடம் வழங்கினார்.
















