திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணியினர் கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கூட்டு பிரார்த்தனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படி திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய திரளானோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
















