அமெரிக்கா தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு தனித்தனி வர்த்தக விதிமுறைகளை கையாள்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்று பேசிய அவர், தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட அரசியலுக்கு அளிக்கும் முக்கியத்துவமே மேலோங்கி இருக்கிறது என தெரிவித்தார்.
வர்த்தக ரீதியிலான முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நாடாக நீண்ட காலமாக திகழ்ந்த அமெரிக்கா, தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு தனித்தனி வர்த்தக விதிமுறைகளை வகுத்து வருவதாக சாடினார்.
நெடுஞ்சாலைகள், ரயில்வே உள்ளிட்ட உட்கட்டமைப்பில், ஆசிய பொருளாதாரத்திற்கு நிகராக இந்தியாவும் வளர்ச்சி அடைந்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
















