தஞ்சை முழுவதும் பெய்த கனமழையால் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் சேதமாகியுள்ளது.
டிட்வா புயல் காரணமாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, 300 ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் சேதமாகின.
முறையான வடிகால் வாய்க்கால் செய்து தரப்படாததே மழைநீர் வயலுக்குள் புகுவதற்கு காரணம் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
















