ஆவின் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க அதன் நிர்வாகம் மறுப்பதாகப் பால்முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பை அடுத்து, பால் பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு கணிசமாகக் குறைத்தது.
அதன்படி நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிதத்தில் இருந்து 5 சதவிதமாகக் குறைக்கப்பட்டது.
ஐஸ்கிரீம் வகைகள் 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதகவிகிதமாகவும் குறைத்து உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக ஆவின் நிர்வாகம், பண்டிகை கால தள்ளுபடியை அறிவித்தது.
இந்த நிலையில் இன்று முதல் அந்தப் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி ரத்து செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பால்முகவர்கள் சங்கம், ஆவின் நிர்வாகம், ஜிஎஸ்டி கவுன்சிலையே ஏமாற்றிவிட்டதாகச் சாடியுள்ளது.
















