சென்னை அரும்பாக்கத்தில் 10 மாதங்களாகப் பாலம் கட்டப்படாமல் உள்ளதால், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எம்எம்டிஏ காலனியில் உள்ள தமிழர் தெருவில் ஆற்றின் குறுக்கே 10 மாதங்களாகப் பாலம் கட்டப்படாமல் உள்ளது.
இதனால் பெரியார் பாதையில் இருந்து அண்ணா நகர், அமைந்தகரை செல்லும் வழித்தடம் முடக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 10 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















