தெலங்கானாவில் நர்சரி பள்ளியில் குழந்தைகளை கவனித்து கொள்ளும் பெண் ஒருவர் சிறு குழந்தையைக் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மேட்சல் மாவட்டம் ஜீடிமெட்லாவில் உள்ள நர்சரி பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் பெண் ஒருவர், குழந்தையையை கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தையைத் தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
















