மயிலாடுதுறையில் அரசுப்பள்ளியை மழைநீர் சூழ்ந்துகொண்டதால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது, இதன் நகராட்சி பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்தது, நகராட்சி சார்பில் தேங்கிய நீர் அப்புறப்படுத்தாமல் இருந்ததால் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துப் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
















