கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்ற மாணவர்கள், வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது மழையால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர்.
இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
















