வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதாகவும், மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 6 மணி நேரத்துக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கும் என்றும், பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றிரவு வரை விட்டுவிட்டு கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
















