அமெரிக்காவின் அரிசோனாவில் மின்கம்பத்தில் ஏறிச் சிக்கி இருந்த கரடியை மின்வாரிய ஊழியர் துணிச்சலுடன் செயல்பட்டு கீழே இறங்க செய்தார்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள வில்லெக்ஸ் நகருக்கு அருகில் உள்ள மின்கம்பம் ஒன்றில் கரடி ஒன்று ஏறியது
. மின்சாரம் தாக்கும் அபாயத்தில் கரடி இருப்பது குறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெர்ன் நியுபாயர் என்ற மின் ஊழியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஏணி வண்டியின் மூலம் மின்கம்பத்தின் உச்சி பகுதியை அடைந்த மின்ஊழியர் 7 ஆயிரத்து 200 வோல்ட் மின்கம்பிகளுக்கு அருகில் இருந்த கரடியைத் துணிச்சலுடன் செயல்பட்டு கீழே இறங்க செய்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















