சென்னையை அடுத்த பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் பேருந்து, கார் என அடுத்தடுத்து வாகனங்கள் சிக்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்த நிலையில், சாலையை விரைந்து சீரமைத்து மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















