இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நீக்க முடியாத வகையில் நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைபர் குற்றங்களிலிருந்து பயனாளிகளைக் காக்கும் வண்ணம், மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
அந்த வகையில், சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், புதிதாக விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி எனப்படும் செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
புதிய செல்போன்களில் இந்தச் செயலியை நிறுவ, 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களிலும், இந்தச் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
















