பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கோயிலில் திரையிடப்பட்ட மகாவதார் நரசிம்மா அனிமேஷன் படத்தை ஆயிரக்கணக்கானோர் பக்தி பெருக்குடன் கண்டு களித்தனர்.
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையுடன் மகாவதார் நரசிம்மா அனிமேஷன் திரைப்படத்தை அஸ்வின் குமார் இயக்கி இருந்தார்.
15 கோடியில் உருவான இப்படம், உலகம் முழுவதும் 310 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலில் மகாவதார் நரசிம்மர் குறித்த அனிமேஷன் படம் திரையிடப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் இப்படத்தை பார்க்கத் திரண்டதால் வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மீக நிகழ்வாக மாறி உள்ளது.
பக்திப் பெருக்குடன் ஒரு திரைப்படத்தின் திரையீடு நடைபெற்றிருப்பது கராச்சி நகரில் இதுவே முதல் முறை என்றும் ஆன்மீக ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்டுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
















