இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதேபோல், இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் கனமழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனச் சென்னை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
















