திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சாலையில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வெள்ளம் போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகப் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக ஆவடி – சென்னீர் குப்பம் இடையிலான சாலையில் அதிக அளவு மழைநீர் தேங்கியதோடு, கழிவுநீருடன் கலந்து வெள்ளம் போல் ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை எனத் தெரிவித்த பொதுமக்கள் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
















