ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் எதிரொலியால் தங்கச்சிமடம் பகுதியில் கடந்த 3 நாட்களில் 22 சென்டிமீட்டர் அளவில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக ராஜா நகர், ராஜீவ் காந்தி நகர், ஐயன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழங்கால் அளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் மக்கள் வீட்டிற்கு நடந்து செல்ல முடியாமல் சிறிய மிதவை படகுமூலம் தங்களது வீட்டிற்கு செல்கின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
















