மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குப் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மாங்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கருப்பு முருகானந்தம் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை முழுமையாக அகற்றி இருந்தால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியிருந்திருக்காது எனத் தெரிவித்தார்.
















