கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் முதலமைச்சர் சித்தராமையா காலை விருந்தில் பங்கேற்றார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்காக டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுகுறித்து ஒரு வாரம் குழப்பம் நீடித்த நிலையில், காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி, தங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என இருவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர்.
பின்னர் தனது வீட்டிற்கு காலை விருந்துக்கு வருமாறு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் அதனை ஏற்று சென்ற சித்தராமையாவுக்கு, அவருக்கு மிகவும் பிடித்தமான நாட்டு கோழி குழம்பு, ராகி களி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
















