பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வங்கக்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின்போது பிரம்மோஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது.
பிரம்மோஸ் ஏவுகணையின் இந்த வெற்றி, நீண்ட தூர துல்லியத் தாக்குதல் திறனை உறுதிப்படுத்தியிருப்பதுடன், பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் ஆற்றல் மற்றம் எதிர்கால சவால்களை முறியடிப்பதற்கான வலுவான சான்றாக அமைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















