வேலூர் அருகே சட்டவிரோத மின் வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுக்கத்தூர் அடுத்த இராமநாயினிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜானகிராமன். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் நர்சரி கார்டன் வைத்துள்ளார்.
வழக்கம் போல் ஜானகிராமன் மற்றும் இரண்டு மகன்களான விகாஷ், ஜீவா ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரெனத் தந்தை ஜானகிராமனின் அலறல் சந்தம் கேட்டு மகன்கள் விகாஷ், ஜீவா ஆகியோர் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பக்கத்து நிலத்தில் வைத்திருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய தந்தையை மீட்க முயன்றனர்.
இதில் மூவருமே உயிரிழந்தனர். இதனையறிந்து அங்குச் சென்ற போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.
















