திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உடனடியாகத் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியினர் கோயில் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் எற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தீபத்தூணில் உடனடியாகத் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியினர் கோயில் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் தீபமேற்றுவதற்கான நெய்யினை, தாங்களே தருவதாகக் கூறிய இந்து முன்னணியினர் உடனடியாகத் தீபம் ஏற்றுவதற்கான வேலைகளை தொடங்க வேண்டுமென கோயில் நிர்வாகத்தினரை வலியுறுத்தினர்.
















