வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடியின் செயலை அவரது கட்சி பாராட்டியுள்ளது.
வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையறிந்த பிரதமர் மோடி, கலீதா ஜியா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததுடன், தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் செயல் நல்லெண்ணத்தின் சைகை என வங்கதேச தேசியவாத கட்சியினர் பாராட்டியுள்ளனர்.
















