எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மக்களவை இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. தொடர்ந்து வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிா்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாகக் காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது எஸ்ஐஆா் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பகல் 2 மணிக்கு அவை கூடியபோது எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
















