8-வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, 8-வது ஊதியக் குழுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.
அதில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது தொடர்பான எந்தத் திட்டமும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
8வது ஊதியக் குழு 2027-க்குப் பிறகுதான் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசை பல ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
















