சாலைகள் மற்றும் தெருக்களை தூய்மை படுத்தும் பணிகளுக்கு ரோபோக்களை சீனா களமிறக்கி உள்ளது.
மனிதர்களை கொண்டு செய்யப்படும் கடின வேலைகளை ரோபோக்களை செய்யும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை சீனா அடுத்தடுத்து உருவாகி வருகிறது.
அந்த வகையில் சீனாவின் ஷென்சென் நகரில் ஸ்மார்ட் நகரங்களுக்கு ஸ்மார்ட் சுத்தம் தேவை என்ற கருப் பொருளுடன் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மனித உதவியின்றி தானாகவே குப்பைகளை அகற்றுவது, கழிவுகளை சேகரிப்பது மற்றும் துப்பரவு பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை இந்த ரோபோ செய்கிறது.
இந்த ரோபோக்கள் துல்லியமாகவும், திறமையாகவும் செயல்படுவதால், நகரின் தூய்மை மற்றும் சுகாதாரத் தரம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷென்சென் நகரை மேலும் திறமையான ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியாக ரோபோட்டிக் துப்புரவு முறை பார்க்கப்படுகிறது.
















