சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதையில், தேநீர் கடை தொழிலாளர் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
புதுவண்ணாரப்பேட்டையில் கனகராஜ் என்பவரின் தேநீர் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், போதையில் பிஸ்கட் பாட்டிலை தட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடையில் பணியாற்றும் விஸ்வநாதன் என்பவர் அதனைத் தட்டிக்கேட்டதால், அவர் மீது அந்த இளைஞர் தாக்குதல் நடத்தினார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
















