கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலை கோயில் கருவறை முன் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்தத் தீப உற்சவத்தைக் காண 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன.
13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையமும், 130 தற்காலிக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, கழிவறை வசதி, மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
















