உத்தரப்பிரதேசத்தில் பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேசத்தின் பிடோலியில் பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயல்களுக்கு தயாராகி வருவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனையடுத்து போலீசார் திருப்பித் தாக்கியதில், 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பவாரியா கொள்ளையர்களின் தலைவனான மிதுன் என்பவர் பலியானார்.
சுட்டுக் கொல்லப்பட்ட மிதுனின் தலைக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது எனப் போலீசார் கூறியுள்ளனர்.
















