பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மீனவர்கள் சாண்டா கிளாஸ் வேடமிட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச படகுசவாரி வழங்கியது வரவேற்பை பெற்றுள்ளது.
பெருவின் புகழ்பெற்ற ஹுவான்சாகோ தீவில், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக மீனவர்கள் ஓர் உற்சாகமூட்டும் நிகழ்வில் ஈடுபட்டனர்.
சாண்டா கிளாஸ் உடையணிந்த வந்து சுற்றுலா பயணிகளை மீனவர்கள் உற்சாகப்படுத்தினர்.
மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை பாரம்பரிய நாணல் படகுகளை பயன்படுத்தி இலவச படகு சவாரிகளை மீனவர்கள் வழங்கினர்.
இந்தத் தனித்துவமான கொண்டாட்டம், ஹுவான்சாகோவின் பல நூற்றாண்டுப் பாரம்பரியமான நாணல் படகு சவாரியுடன் கிறிஸ்துமஸ் உற்சாகத்தையும் இணைத்ததுள்ளது.
இது அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரப் பெருமையையும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஈகைக் குணத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்ததுள்ளதாகச் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
















