மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் கோயில் அருகே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதாகப் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
















