ஆஸ்திரியாவில் தங்கள் வீட்டை மின்விளக்குகளால் அலங்கரித்து வருமானம் ஈட்டும் கோல்ன்ஹுபர் குடும்பத்தினர், அதனைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றனர்.
ஆஸ்திரியாவின் வியன்னா அருகே உள்ள ஸ்பா நகரமான பேட் டாட்ஸ்மான்ஸ்டார்ஃபில் கோல்ன்ஹுபர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தங்களது வீட்டை ஒரு தனித்துவமாக அடையாளப்படுத்த பல்லாயிரக்கணக்கான மின்விளக்குகளால் அலங்கரித்துப் பிரபலமாகி உள்ளனர்.
கோல்ன்ஹுபர் குடும்பத்தினர் வீட்டைப் பார்வையிட உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம்.
அலங்காரத்தைக் காண வரும் பார்வையாளர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டப் பயன்படுத்தப்படுகின்றன.
















