சென்னை கோயம்பேடு அருகே சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
தொடர் கனமழையால் நெற்குன்றம் பட்டேல் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியடைந்தனர்.
சென்னை பூந்தமல்லி பகுதியில் தொடர் மழை காரணமாகப் பேருந்து நிலையம் எதிரே உள்ள டிரங்க் சாலை கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், எந்த இடத்தில் குழி இருக்கிறது எனத் தெரியாமல் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக வரவழைக்கப்பட்ட ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களும் அதே சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.
















