2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரேஜ் பெய்ட் (Rage Bait) என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும், ஆக்ஸ்ஃபோர்டு அகராதி, ஒரு வார்த்தையை தேர்வு செய்து, அதனை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தை என்று அறிவிப்பது வழக்கம்.
ஆன்லைனில் ஒன்றை படிக்கும்போதோ அல்லது அதனைப் பார்க்கும்போதோ, அது நம்மைக் கோபப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது போலத் தோன்றிருந்தால் அந்த உணர்வை வெளிப்படுத்துவதுதான் ரேஜ் பெய்ட் என்கிறார்கள்.
மக்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் பதிவுகள், வீடியோக்கள், ரீல்ஸ்களை அதிகம் பதிவிட்டு லைக்குகள் வாங்குவது இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்தச் செயல்பாடுகளால், ரேஜ் பைட் என்ற வார்த்தையின் பயன்பாடு இணையதளத்தில் இந்தாண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
3 நாள்கள் நடந்த வாக்கெடுப்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தைத் தெரிவித்த பிறகு, 2025 ஆம் ஆண்டிற்கான தங்கள் அதிகாரப்பூர்வ ஆக்ஸ்போர்டு வார்த்தையாக ரேஜ் பெய்டைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
















