வெளிநாடுகளுக்கு தப்பிய பொருளாதார குற்றவாளிகள் மீது, 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன்தொகை நிலுவையில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் நம் நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் செலுத்த வேண்டிய கடன்தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 15 பொருளாதார குற்றவாளிகள்மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், விஜய் மல்லையாவிடம் 14,000 கோடி ரூபாயும், நீரவ் மோடியிடம் 545 கோடி ரூபாயும் சொத்துக்கள் பறிமுதல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
















