யார் நன்மை செய்வார்கள் என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி பரப்புரையில் பேசிய அவர், கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தைச் தொடர்ந்து உடனே அங்கு விரைந்த முதல்வர் கால்கள், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 68 பேர் இறந்தபோது மட்டும் ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலினுக்கு மக்கள் நலனைப் பற்றி கவலையில்லை என்றும், திமுக ஆட்சியில் கிராமம்தோறும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
புதியவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஜனநாயகத்தில் அவர்களுக்கு உரிமையும், கடமையும் உள்ளது. ஆனால், மக்களுக்கு யார் நன்மை செய்வார் என்று சிந்தித்து, வாக்களிக்க வேண்டும் என, விஜய்யை மறைமுகமாக அவர் சாடினார்.
















