ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ துறையின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமணியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தப் பதவியில் இருக்கும் ஜான் கியானாண்ட்ரியா ஓய்வு பெற உள்ளதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு அமர் சுப்ரமணியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமர் சுப்ரமணியா, இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ துறையின் துணைத்தலைவராகப் பதவி வகித்து வந்தார்.
அதற்கு முன்னர், கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகளாகக் கூகுள் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் துறையின் பொறியியல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.
















