கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாரசந்திரத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்தார். இன்று அதிகாலை ஹரிஷ், மாருதி நகர் அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம்குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















