உலகில் பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த தனக்கு இதுவரை 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய டிரம்ப், தான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாகவும், ஒவ்வொரு போர் நிறுத்தத்துக்கும் தனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆனால், அது தனக்கு வேண்டாம் என கூறிய டிரம்ப், தான் பேராசைப்பட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
















