திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டுமனை அனுமதி வழங்க 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் திமுக பெண் கவுன்சிலர் புகார் தெரிவித்துள்ளார்.
திருநின்றவூர் நகராட்சியில் திமுக நிர்வாகியான யோகானந்தம் என்பவர் வீட்டு மனை பிரிவு அமைத்துள்ளார்.
இதற்கான அனுமதி கடந்த 2024ஆம் ஆண்டு CMDAவால் வழங்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற மனு அளித்துள்ளார்.
ஆனால் அனுமதி வழங்க 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வீட்டு மனை அமைத்த திமுக நிர்வாகியின் மனைவியும், 6வது வார்டு கவுன்சிலருமான தேவி வீட்டுமனைக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாகப் புகார் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் 4 பேர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
















