சென்னை ஓட்டேரியில் கனமழையால் அடுக்குமாடி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன் மனைவி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
ஓட்டேரி ஸ்டிராஹன்ஸ் சாலையில் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இதன் அருகே ஷெரினாபானு என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஷெரினாபானு மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
















