சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பதற்றம் நிலவியது.
நீலாங்கரை பாரதியார் நகரை சேர்ந்த அருணாசலம் என்ற இளைஞர் கார் மோதியதில் உயிரிழந்தார். தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்படாததால் உறவினர்கள் ஆர்டிஓ அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விட்டதாகப் போலீசார் தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
















