அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாய் 14 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா உலகளாவிய வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்திலேயே உள்ளது.
சந்தையில் டாலருக்கான தேவை அதிகமாக இருப்பது, ரூபாயின் மீட்சியை தடுக்கிறது. இந்நிலையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 90 ரூபாய் 14 காசுகளாக உள்ளது.
முதல் முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90ஐ கடந்துள்ளது. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தாமதம், உலக சந்தையில் நிலையற்ற தன்மை, ரூபாய் மதிப்பு சரிவுக்குக் காரணமாக உள்ளன.
















