சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மழைக் காலத்தில் சாலை பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற மாநகராட்சியின் உத்தரவை மீறி மேற்கொள்ளப்பட்ட பணிகள் பலனளிக்காமல், சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறியது.
மேலும், மேம்பாலத்தின் சென்டர் மீடியன் உடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
















