டாஸ்மாக் மதுப்பான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் சோதனைகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டிய பாரில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுப்பானங்கள் விற்கப்படுவதாகக் கூறி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து பார் உரிமம் பெற்றவர்கள், சட்ட விரோதமாக மதுபானங்கள் இரவு நேரங்களில் விற்கின்றனர் என்று மனுதாரர் குறிப்பிட்டார்.
இதையடுத்து டாஸ்மாக் மதுப்பான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் சோதனைகள் நடத்த டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
















