திண்டுக்கல் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த பல வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, அங்குள்ள கருப்பண்ணசாமி கோயிலில் தீபம் ஏற்றும் பணிகளை சிலர் செய்து வந்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் இங்குத் தீபம் ஏற்றக்ககூடாதெனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில ஏராளமானோர் போலீசார் குவிக்கப்பட்டு, ஆட்சியரின் பரிந்துரைப்படி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















