தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் கிரானைட்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்திலிருந்து கேரளாவிற்கு கிரானைட்கல் லோடு ஏற்றி லாரி சென்றுள்ளது. தொப்பூர் அருகே லாரியின் கியர் பாக்சிஸ் இருந்து திடீரெனப் புகை வந்ததையடுத்து ஓட்டுநர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி உள்ளார்.
இதனையடுத்து லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில், லாரி முற்றிலும் எரிந்து சேதமாகியது. இந்த விபத்தால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















